தள்ளிப் போங்க... எச்சரித்த விஜய்... தவெக பூத் கமிட்டி மாநாட்டில் திடீர் தீ விபத்து !

 
விஜய்
 


தமிழகத்தில் அரசியல் கட்சிகள் 2026 தேர்தலை அடிப்படையாக கொண்டு தீவிர களப்பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் தவெக இன்று பூத் கமிட்டி மாநாட்டை நடத்தி வருகிறது. அதன்படி கோவை மாவட்டம்  சரவணம்பட்டியில் உள்ள கல்லூரியில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு தொடங்கியுள்ளது. 

விஜய் தவெக மாநாடு

இந்த மாநாட்டில் நடிகர் விஜய் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த நிலையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக சென்னையில் இருந்து கோவை வந்த நடிகர் விஜய்க்கு தொண்டர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  ரோடு ஷோ நடத்திய விஜய்க்கு அலைகடலென தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்ததால் கோவையே ஸ்தம்பித்தது.  

விஜய்
இந்நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு தொடங்கியுள்ள நிலையில் அந்த இடத்திற்கு அருகே மின் கசிவு காரணமாக சிறிய தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் மின் வயர் செல்வதால் அந்த இடத்தில் இருந்து தொண்டர்கள் அனைவரும் விலகி நிற்கும் படி எச்சரிக்கை விடுத்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?