பிரேசில் காலநிலை மாநாட்டில் திடீர் தீவிபத்து...!
பிரேசிலில் நடைபெற்று வரும் சர்வதேச காலநிலை மாநாட்டில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவைச் சார்ந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் உள்ளிட்ட 20 பேர் பங்கேற்று வந்த நிலையில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.20 மணிக்கு மாநாட்டு அரங்கின் ஒரு பகுதி திடீரென புகை மூழ்கியது. உடனே அலாரம் ஒலித்ததும் பாதுகாப்பு பணியாளர்கள் அனைவரையும் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
A fire spread through pavilions being used for U.N. climate talks in Brazil and prompted evacuations Thursday on the next-to-last day of the conference but nobody was hurt, officials said. pic.twitter.com/p5l6Ew5fZD
— The Associated Press (@AP) November 20, 2025
தீ விபத்துக்கான காரணம் தெளிவாக தெரியாத நிலையில், பேவிலியன் பகுதிக்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆரம்ப தகவலின்படி 13 பேர் காயமடைந்ததாக கூறப்பட்டு, அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. தீ பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் விரைவாகக் களமிறங்கினர்.

அத்துடன், தீ விபத்து ஏற்பட்ட வேளையில் மாநாட்டு அரங்கில் இருந்த அமைச்சர் பூபேந்திர யாதவ் உட்பட இந்திய குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த சம்பவம் காரணமாக மாநாட்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
