ஓஎம்ஆர் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீவிபத்து!

 
ஓஎம்ஆர்
 

சென்னை கேளம்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் வசிக்கும் இந்த குடியிருப்பில் ஏற்பட்ட தீயால் அங்கு அச்சநிலை ஏற்பட்டது.

செய்தி கிடைத்ததும் தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல நிமிடங்கள் போராடிய பின், அவர்கள் தீயை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் உயிர்பாதிப்பு எதுவும் ஏற்படாததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!