திருப்பதியில் திடீர் தீவிபத்து!

திருப்பதியில் பிரசித்தி பெற்ற கோவிந்தராஜ சுவாமி கோவில் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள கடையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மின் கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களிலேயே தீ மளமளவென பரவத்தொடங்கியது.
அத்துடன் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க அமைக்கப்பட்ட நிழற்பந்தலும் உடன் சேர்ந்து தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கி எரிந்து கொண்டிருந்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தால் திருப்பதி முழுவதும் பரபரப்பான சூழல்நிலவி வருகிறது. வேகமாக பற்றி எரிந்த தீ, பல கடைகளுக்கும் பரவியது. இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இச்சம்பவம் நள்ளிரவில் நடைபெற்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!