குன்னூரில் மலை ரயிலில் திடீர் தீ… சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

 
குன்னூர்

மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை குன்னூர் நோக்கி புறப்பட்ட நீலகிரி மலை ரயில், குன்னூர் அருகே வந்தபோது இன்ஜினில் திடீரென தீப்பிடித்தது. இன்ஜினில் இருந்து புகை வெளியேறியதால் ரயில் உடனே நிறுத்தப்பட்டது. இந்த திடீர் சம்பவம் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஊட்டி மலை ரயில் ரத்து!!

தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர்.

ஊட்டி

இந்த தீ விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர். கடந்த 2-ம் தேதி நள்ளிரவு பெய்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சீரமைப்பு பணிகள் முடிந்து நேற்று முன்தினமே மீண்டும் ரயில் இயக்கம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!