தாமிரவருணியில் திடீர் வெள்ளப்பெருக்கு… கோவிலை சூழ்ந்த நீர்!

 
தாமிரபரணி

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் தாமிரவருணி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடனா அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி சுமார் 12,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, கருப்பந்துறை உள்ளிட்ட கரையோர பகுதிகளில் படித்துறைகள், பாறைகள் நீரில் மூழ்கின.

தாமிரபரணி

வெள்ளம் சூழ்ந்ததால் பழமையான குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டது. கோயிலில் இருந்த உற்சவச் சிலைகள், சப்பரங்கள், பூஜை பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பாக கரையோர மண்டபத்திற்கு மாற்றப்பட்டன. ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கையாக இருக்கவும், ஆற்றில் குளிக்கவோ வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம் என நிர்வாகம் அறிவுறுத்தியது.

 தாமிரபரணி

நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை குறைந்ததை தொடர்ந்து களக்காடு தலையணை மற்றும் நம்பியாற்றில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. திருக்குறுங்குடி திருமலை நம்பிகோயிலுக்கும் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!