புத்தாண்டில் அதிர்ச்சி.. ஓட்டுனர் பயிற்சிக் கட்டணம் திடீர் உயர்வு... !

 
ஓட்டுனர் பயிற்சி

தினசரி படிப்பு மற்றும் பணிக்காக இருக்கும் இடத்தில் இருந்து   செல்வதற்காக சிலர்  பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். பலர் நேரம், வசதி இவைகளுக்காக  சொந்த வாகனத்தில் செல்கின்றனர்.   அதன்படி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்கின்றனர். இதனை கற்றுக் கொள்வதற்கும்   ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும்  ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி அவசியம்.  இந்த பயிற்சி நிறுவனங்களின் கட்டணங்களை   போக்குவரத்து துறை தான் முடிவு செய்யும்.  

ஓட்டுனர் பயிற்சி

அந்த வகையில், கர்நாடகாவில்  இருச்சக்கர வாகனம் ஓட்ட பயிற்சி பெற கட்டணமாக ரூ.2,200, ஆட்டோ ரிக்‌ஷா கட்டணமாக ரூ.3,000, கார், இதர இலகு ரக வாகனங்களுக்கான கட்டணமாக ரூ.4,000 மற்றும் பேருந்து போன்ற வாகனங்களுக்கான கட்டணமாக 6,000  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தற்போது  கர்நாடகா மாநில போக்குவரத்து துறை அமைச்சகம் ஓட்டுநர் பயிற்சிக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

ஓட்டுனர் பயிற்சி

அந்த வகையில், மோட்டார் சைக்கிள் பயிற்சி பெறுவதற்கான கட்டணம் ரூ.3,000 ஆகவும், ஆட்டோ ரிக்‌ஷா கட்டணம் ரூ.4,000 ஆகவும், கார், இதர இலகு ரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.7,000 ஆகவும், பேருந்து போன்ற  வாகனங்களுக்கான கட்டணம் ரூ.9,000 ஆகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்று ஜனவரி 1, 2024 முதல்  இந்த புதிய கட்டண விதிமுறை  அமலில் இருக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web