மாதத்தின் முதல் நாளில் உற்சாகம்... வணிக பயன்பாடு சிலிண்டர் விலை திடீர் குறைப்பு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படை மற்றும் அமெரிக்காவின் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆகியவற்றை பெட்ரோலிய நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
இந்நிலையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.58 குறைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்காக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ1,822.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1,665-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!