அதிர்ச்சி வீடியோ!! சென்னை ரயிலில் திடீர் புகை!! அலறி அடித்து இறங்கி ஓடிய பயணிகள் !!

 
ரயிலில் புகை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆந்திரா மாநிலம் குப்பம் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு குளிர் சாதன வசதி கொண்ட டபுள் டக்கர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 14 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் வழக்கம் போல் இன்று காலை வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செல்லும் போது திடீரென புகை வெளியேறியது. குபு குபுவென புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியில் பயணிகள் உறைந்தனர்.உடனே ரயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்படவே ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.


விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் ரயிலை ஆய்வு செய்தனர். ரயிலின் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகை வந்தது தெரியவந்தது. உடனடியாக ரயிலின் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறை ரயில்வே ஊழியர்கள் சரி செய்தனர். இதையடுத்து ரயில் புறப்பட்டு சென்றது. திடீரென ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.கடந்த இரு தினங்களுக்கு முன்பாகத்தான் அசாமின் திப்ருகர் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி வரை இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வெளியேறியது. ஒடிசாவின் பிரம்மப்பூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, திடீரென புகை கிளம்பியது. இதனால், அந்த ரயிலில் பயணித்த பயணிகள் அச்சம் அடைந்தனர். பயணிகளும் அலறியடித்து ரயில்களில் இருந்து இறங்கினர்.

டபுள்டக்கர் ட்ரெயின்
தண்டவாளத்தில் இருந்த சாக்குப்பை ஒன்று ரயிலின் சக்கரத்தில் பிரேக் பகுதியில் சிக்கிக்கொண்டதால் ஏற்பட்ட தேய்மானத்தின் காரணமாகவே புகை வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது. இது போன்று தொடர்ச்சியாக சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் ரயில்வே நிர்வாகம் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web