திடீர் ட்விஸ்ட்... காளியம்மாளைத் தொடர்ந்து நடிகை ரஞ்சனா... தவெகவின் பலம் கூடுகிறதா?!

 
தவெக ரஞ்சனா நாச்சியார்

நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், அதே சூட்டோடு பாரதிய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில செயலாளராக பதவி வகித்து வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார், தனது அடிப்படை உறுப்பினர் முதற்கொண்டு அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாகவும் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்து பரபரப்பைக் கிளப்பினார்.

தமிழக மக்களுக்கு, அரசு பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை கண்டித்த நடிகை ரஞ்சனா என்றால் எளிதில் நினைவிருக்கும். ஒரே வீடியோவில் தமிழகம் முழுக்கவே பரபரப்பைக் கிளப்பி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்கையும் சந்தித்து கவனம் ஈர்த்தவர்.

தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் தற்போது பாஜகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

 ரஞ்சனா நாச்சியார்

இதனையடுத்து  செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சனா நாச்சியார், “பாஜகவில் இருந்து வெளியேற காரணங்கள் நிறைய இருக்கிறது. சிலவற்றை சொல்ல முடியும். சிலவற்றை சொல்ல முடியாது. சில காரணங்களில் முக்கியமானவற்றை தான் இந்த அறிக்கையில் எழுதியிருக்கிறேன். மற்றொரு மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் பாஜக தரப்பு வாதம். மூன்றாவது மொழியாக ஹிந்தி என்று அவர்கள் கூறவில்லை. ஆனால், எல்லாப் பள்ளிகளிலும் அவரவர் விரும்பும் மொழிகளுக்கென்று தனித்தனி ஆசிரியர்கள் இருப்பதில்லை. நிச்சயமாக இந்தி ஆசிரியர்தான் இருப்பார்கள். எனவே, இந்தியை மூன்றாவது மொழியாக எடுக்க நாம் நிர்பந்திக்கப்படுவோம்.

ரஞ்சனா நாச்சியார்

திணிக்கப்படுவோம்.பாஜக அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்துவதைப் போலுள்ளது. தமிழகத்திற்கு நிதி கொடுக்க மாட்டேன் என்பதை ஆணவமாகவே பார்க்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.  மேலும், பாஜகவில் இருந்து திடீரென விலகிய அவர், அடுத்தது விஜயின் தவெகவில் இணையப்போகிறீர்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு... அவசரம் வேண்டாம்... மாற்றுக் கட்சியில் இணைவது குறித்து இரண்டு, மூன்று நாட்களில் நானே அறிவிப்பேன்  எனக் கூறியுள்ளார்.  

இதற்கிடையே காளியம்மாளுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட தவெக வாய்ப்பு வழங்க உறுதியளித்திருப்பதாகவும், அதே போன்று நடிகை ரஞ்சனாவும் தவெகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்து பெண்கள் உட்பட பலரும் பிற கட்சிகளில் இருந்து தவெகவில் இணைந்து வருகின்றனர். அதிமுக முன்னாள் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் தவெகவில் இணைய தூது அனுப்பிக் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸ் பெருந்தலைகளுமே தவெகவில் பதவியை எதிர்பார்த்து காய் நகர்த்தி வருவதாகவும் சொல்கிறார்கள். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web