காவலரின் தாய் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... இளம்பெண் கைது, நகைகள் மீட்பு!

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே காவலரின் தாயை கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவருக்கு 2 மாத கைக்குழந்தை இருப்பதால் அவரை போலீசார் வீட்டுக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தேரிப்பனையைச் சேர்ந்த ஜெயபால் மனைவி வசந்தா (70). மகன் விக்ராந்த், நாசரேத் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். தற்போது சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு ஜெயபால் இறந்து விட்டதால் வசந்தா தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று வசந்தா தனது வீட்டில் கொலையுண்டு கிடந்தார். மேலும் வசந்தா அணிந்திருந்த தங்கச் சங்கிலியும் திருடுபோயிருந்தது. இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜான் ஆல்பட்ராஜ் சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக டிஐஜி சந்தோஷ் ஹதிமனி உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், பேய்குளம் அருகே உள்ள மீரான் குலத்தைச் சேர்ந்த செல்வ ரதி (22) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்வரதிக்கு சொந்த ஊர் தேரிப்பனை. அங்கிருந்து ஈசாக் என்பவருடன் திருமணம் ஆகி மீரான் குளத்தில் வசித்து வந்தார். இவருக்கு திருட்டு பழக்கம் இருந்துள்ளது. கொலை செய்யப்பட்ட வசந்தா வீட்டில் எலுமிச்சம்பழம் மரம் வளர்த்து வந்துள்ளார். மேலும் கோழிகளையும் வளர்த்து வந்துள்ளார்.
வசந்தாவின் வீட்டில் எலுமிச்சம்பழம் மற்றும் கோழிகளை செல்வ ரதி திருடி சென்றுள்ளார். இதை தட்டி கேட்ட வசந்தாவிடம் தகராறு செய்து அவரை வீட்டுக்குள் கீழே தள்ளி தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு கொலையை மறைப்பதற்காக, அவர் அணிந்திருந்த 6 சவரன் நகையைத் திருடி சென்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து போலீசார் நகைகளை மீட்டனர். மேலும். அவருக்கு 2 மாத கைக்குழந்தை இருப்பதால் அவரை போலீசார் வீட்டுக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!