திடீர் ட்விஸ்ட்.. பரபரப்பு வீடியோ.. இப்படியெல்லாமா தோற்பாங்க? உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் கார்ல்சென் அதிர்ச்சி தோல்வி!

 
கார்ல்சன்

உலக பிளிட்ஸ் செஸ் போட்டித் தொடரில் முன்னணி விளையாட்டு வீரர் கார்ல்சென் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். \

இந்த தொடரின் 14வது சுற்றில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனும், அர்மேனியாவின் ஹேக் மார்ட்டிரோசியன் விளையாடினர். ஆட்டத்தின் 69வது நகர்த்தலில் கார்ல்சென் நேர நெருக்கடியில் இருந்தார். அவரிடம் வெறும் 2 வினாடிகள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் வேகமாக காயை நகர்த்த முயன்றார்.


 

ஆனால் பதற்றத்தில் கார்ல்சென் பல காய்களை தவறாக தட்டி கீழே தள்ளி விட்டார். பிளிட்ஸ் செஸ் விதிமுறைகளின் படி, செஸ் காய்கள் கீழே விழுந்தால் நேரக் கடிகாரத்தை நிறுத்துவதற்கு முன் அவற்றை சரியாக வைக்க வேண்டும்.

கார்ல்சன்

கார்ல்சென் அதனை செய்யாமல் கடிகாரத்தை அழுத்தியதால் எதிராளி ஹேக் மார்ட்டிரோசியன் உடனடியாக இது குறித்து முறையீடு செய்தார். நடுவர் கார்ல்சென் தோல்வியடைந்ததாக அறிவித்தார். இதன் மூலம் முன்னணி வீரர் கார்ல்சென் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!