திடீர் ட்விஸ்ட்... மரத்திலிருந்து கசிந்த நீர்… மஞ்சள் குங்குமம் வைத்து கடவுளாக வழிபட்ட கிராம மக்கள்!

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதிலும் மக்கள் தங்கள் மூடநம்பிக்கைகளை விடுவதாக இல்லை. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் பிம்ப்பி சின்ச்வாத் பகுதியில் இருந்த ஒரு மரத்தின் தண்டில் இருந்து திடீரென நீர் கசிய தொடங்கியது.
இதனை பார்த்ததும் அந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் அந்த மரத்திற்கு மஞ்சள், குங்குமம் பூசி மரத்தை கடவுளாக வழிபட தொடங்கிவிட்டனர்.
அதன் பின், மரத்திலிருந்து கசியும் நீர் நோய்களை தீர்க்கும் என்று கூறி அதனை எடுத்து சென்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் தண்ணீர் குழாயில் ஏற்பட்ட கசிவால் மரத்தில் தண்ணீர் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!