கும்பக்கரை அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளம்.. !! அலறித் துடித்த சுற்றுலா பயணிகள்!!

 
கும்பக்கரை

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானல் வனஉயிரின சரணாலயத்தில் அமைந்துள்ள இப்பகுதி, தேவதானப்பட்டி வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வட்டக்கானல், கொடைக்கானல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழை கும்பக்கரை அருவியில் கொட்டுகிறது.

கோடைக் காலம் தொடங்கியதை அடுத்து, கடந்த சில நாட்களாக அருவியில் நீர்வரத்துக் குறைவாக இருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்தது. 

கும்பக்கரை

எனினும் அவ்வப்போ பெய்யும் மழையால் திடீரெனர் நீர்வரத்து அதிகரிக்கிறது. இந்த நிலையில் வார விடுமுறை நாளான நேற்று கும்பக்கரை அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இதனிடையே, நேற்று மாலை 4 மணியளவில் கொடைக்கானலின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதைத்தொடர்ந்து கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்படத் தொடங்கியது. உடனே சுதாகரித்த கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வன அலுவலர்கள், சுற்றுலாப் பயணிகளை கரைப் பகுதிக்கு வருமாறு அறிவுறுத்தினர்.

எனினும், நீர்வரத்து வேகமாக அதிகரித்ததால் 30 பேரால் விரைவாக கரைக்கு திரும்ப முடியவில்லை. இதையடுத்து அவர்கள் பாதுகாப்பாக மறுகரையில் ஏறி வனப்பகுதியில் நின்று கொண்டனர். ஒருசிலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அங்கு பணியில் இருந்த வனத்துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கும்பக்கரை

யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் வந்த வெள்ளத்தால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுஉள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web