திடீரென பேச மறுத்த காதலி... சுத்தியலால் அடித்தே கொன்ற காதலன்!
தெலங்கானா மாநிலம், சூர்யாபேட்டை மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து வந்த பெண், திடீரென தன்னுடைய பெற்றோர் காதலுக்கு தெரிவித்ததால், மொத்தமாக பெற்றோர் பேச்சைக் கேட்டு, தன்னுடனான தொடர்பை முற்றிலும் நிறுத்தியதால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் காதலன் பாண்ட்லா மகேஷ், காதலியின் வீட்டிற்குள் புகுந்து சுத்தியலால் தாக்கி, காதலியை துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலின் போது எழுந்த இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி சென்றனர். சம்பவ இடத்திலேயே ரத்தம் சொட்ட சொட்ட கையில் சுத்தியலுடன் நின்றுக் கொண்டிருந்த மகேஷை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை தொடங்கினர். குற்றம் சாட்டப்பட்ட மகேஷை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
