பகீர் வீடியோ!! திடீரென தீப்பற்றி எரிந்த மொபைல் !!

 
முதியவர்

மொபைல் இல்லையெனில் வாழ்க்கையே இல்லை எனும் அளவுக்கு ஒன்றாக கலந்து விட்டது. ஆனால் அதிகம் பயன்படுத்தும் போது சில விபரீதங்களும் நிகழ்ந்து விடுகின்றன. கேரளாவில் சட்டைப்பாக்கெட்டில் மொபைலை வைத்துக் கொண்டு டீக்கடைக்கு டீ குடிக்க வந்தார் முதியவர் ஒருவர். இவர் சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் திடீரென தீப்பிடித்தது.  உடனடியாக குதித்து, தேநீர் கிளாஸைத் தட்டி, தனது பாக்கெட்டிலிருந்து தொலைபேசியை எடுக்க வெறித்தனமாக முயற்சிக்கிறார்


. அவரது வெறித்தனமான முயற்சிகளால் அவர் அதனை கீழே தள்ளி விடுகிறார். அவரது சட்டைப் பையில் இருந்து தரையில் விழுந்தது, மேலும் அவர் காயமின்றி அந்த இடத்தை விட்டு வெளியேற முடிந்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி விடுத்த செய்திக்குறிப்பில் முதியவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.  தகவல் கிடைத்ததும் அந்த முதியவரை அழைத்து என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்டோம்.  அவர் அந்த மொபைலை ஒரு வருடத்திற்கு முன்பு ரூ1000க்கு அதனை வாங்கியதாக தெரிவித்தார்.  இப்போது வரை, சாதனத்தில் எந்த பிரச்சனையும் இல்லை,  என வாக்குமூலம் அளித்துள்ளார். 

மொபைல்
கடந்த வாரம், கோழிக்கோடு நகரில், கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் போன் வெடித்ததில், ஒருவர் தீக்காயமடைந்த சம்பவம் நடந்து பெரும் பரபரப்புக்குள்ளானது. இதே போல் ஏப்ரல் 24 ம் தேதி  திருச்சூரைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி  மொபைல் போன் வெடித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web