திடீரென தறிகெட்டு ஓடிய லாரி... கட்டுப்பாட்டை இழந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதி விபத்து!

 
லாரி

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியில், தமிழகப் பதிவெண் கொண்ட சரக்கு லாரி ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நடுரோட்டில் தறிகெட்டு ஓடிச் சென்று 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது.

விபத்து

மலப்புரம் மாவட்டம் புத்தூர் பகுதியில் பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய அந்த லாரி, எதிரே வந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் உட்படச் சுமார் 10-க்கும் அதிகமான வாகனங்களை இடித்துத் தள்ளியது. விபத்தின் முடிவில், லாரி அங்குள்ள ஒரு மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மீது மோதி நின்றது.

விபத்து

இந்தச் சங்கிலித் தொடர் விபத்தில் சிறுமி உள்பட 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து மலப்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஓட்டுநர் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!