மாநிலங்களவைத் தேர்தல்... தேமுதிக வேட்பாளராக எல்.கே. சுதீஷ் அறிவிப்பு !

 
பிரேமலதா

 

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போது திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு ஆகியோரும், அதிமுக சார்பில் தம்பிதுரையும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் பதவி வகித்து வருகின்றனர். இவர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் தமிழ்நாடு உட்பட நாட்டின் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் திமுகவுக்கும் 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும். திமுக கூட்டணியில் தேமுதிகக்கு ஒரு இடமும், காங்கிரஸுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேமுதிக வேட்பாளராக எல்.கே. சுதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அதிமுக சார்பில் தம்பிதுரை, காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், பாமக சார்பில் அன்புமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!