எல்.கே. சுதீஷ் உட்பட 6 மாநிலங்களவை உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு !

 
சுதீஷ் சுதீஷ்

தமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை பொறுத்தவரை திமுக சார்பில் 4 பேரையும், அதிமுக சார்பில் 2 பேரையும் தேர்ந்தெடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதன்படி அதிமுக சார்பில் தம்பிதுரை, கூட்டணிக் கட்சியான பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுக தரப்பில் திருச்சி சிவா, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.  

மேலும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். பின்னர் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இந்த பரிசீலணையில்  இந்த 6 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டன. சுயேட்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டி ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்தது.  

வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் இன்று  பிற்பகல் 3 மணி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நேரம் முடியும் வரை யாரும் மனுவை திரும்ப பெறவில்லை. இதையடுத்து 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் தம்பிதுரை, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் சான்றிதழ்களை பெற்றனர்; திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மாநாட்டில் இருப்பதால் பின்னர் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!