தேவாலயத்தில் தற்கொலை படைத் தாக்குதல்... குழந்தைகள் உட்பட 22 பேர் பலி, 63 பேர் படுகாயம்!

சிரியா நாட்டில் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள புனித எலியாஸ் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தில் நேற்று மாலை மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் குழுவைச் சேர்ந்த ஒருவர், தனிநபராக அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தினார். அத்துடன், தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாகவும், 63 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எகிப்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஜோர்டான் நாடுகள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நேரத்தில் சிரியாவுக்கு ஆதரவாக நிற்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளன. பலியானவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!