பாகிஸ்தானில் திருமண விழாவில் தற்கொலைப்படை தாக்குதல் - 5 பேர் துடிதுடித்து பலி!

 
பாகிஸ்தான் தாக்குதல்

பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இந்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.

குரேஷி மூர் கிராமத்தைச் சேர்ந்த தலைவர் நூர் அகமது மெஷல் என்பவரது வீட்டில் திருமண விழா நடைபெற்றது. இதில் உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

விழா மேடையில் பலரும் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த நேரத்தில், கூட்டத்திற்குள் ஊடுருவிய மர்ம நபர் ஒருவர் தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.

இந்த பயங்கர வெடிப்பில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தகவலறிந்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய நபர் யார்? எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்? என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!