10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை... மன அழுத்தத்தால் பெரும் சோகம்!

 
மாணவன்

மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் சக்கரபாணி நகரைச் சேர்ந்த கோபியின் மகன் ஆதித்யா (17) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். முன்தினம் இரவு அறைக்குள் சென்ற அவர் நீண்ட நேரம் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த பெற்றோர் உள்ளே சென்று பார்த்த போது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவன்

தகவல் கிடைத்ததும் மவுலிவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் மன அழுத்தம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

வேறு காரணங்கள் உள்ளதா என்பதையும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் மனநலன் குறித்து சமூக வட்டாரங்களில் கவலை எழுந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!