திருமண உடையில் புதுமணத் தம்பதி தற்கொலை... சோகத்தில் மூழ்கிய கிராமம்!

 
மத்திய பிரதேசம் மத்திய பிரதேசம்


சாகர்: மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், திருமணக்கோலத்திலேயே புதுமணத் தம்பதியினர் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. 22 வயதான ராஜேந்திரா (கோலு) மற்றும் அவரது 21 வயது மனைவி காஜல் பட்டேல் ஆகியோர், தங்களது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் அம்சம் என்னவென்றால், உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டபோது காஜல் பட்டுப்புடவையிலும், ராஜேந்திரா மணமகன் அணியும் கோட்-சூட் உடையிலும் இருந்துள்ளனர். மேலும், காஜல் ஒன்றரை மாதக் கருவுற்றிருந்ததை (கர்ப்பம்) மருத்துவப் பரிசோதனைகள் உறுதி செய்துள்ளன. உயிரிழந்த இடத்திலிருந்து தற்கொலை குறிப்புகள் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை.

தம்பதியினர் இருவரும் எவ்விதப் புகாருமின்றி மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தங்களுக்குள் எந்தவிதமான வாக்குவாதங்களோ அல்லது மனவருத்தங்களோ இல்லாத சூழலில், அவர்கள் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார்கள் என்பது புரியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர். இது குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!