தொடங்கியாச்சு கோடை.. சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்தது ரயில்வே நிர்வாகம் !!

 
ரயில்

கோடை விடுமுறை தொடங்கியதால் மக்கள் பலரும் சொந்த ஊருக்கு செல்லுதல், சுற்றுலாவுக்கு செல்லுதல், உறவினர் வீட்டுக்கு செல்லுதல் என பல்வேறு காரணங்களுக்காக அதிகம் பயணப்பட திட்டமிட்டிருப்பர். மேலும் வழக்கமாக கோடையில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்.

அந்த வகையில், மக்கள் அதிக பயணிக்கும் காலகட்டம் இது என்பதால் அரசு மற்றும் அதுசார்ந்த நிறுவனங்களும் அவர்களுக்கு கூடுதல் சேவையை வழங்க தயார் நிலையில் உள்ளது. 

ரயில்

ரயில்வே துறையும், இந்த விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களுக்கு சிறந்த சேவையை அளிக்க பல்வேறு திட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.   
இந்நிலையில், இந்த கோடை சீசனில் பயணிகளின் வசதிக்காகவும், கூடுதல் நெரிசலை சமாளிக்கவும் 217 சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் இந்த காலகட்டத்தில் மட்டும் 4,010 பயணங்களை (Trips) மேற்கொள்ளும். இந்தத் தகவலை ரயில்வே அமைச்சகம் நேற்று (ஏப். 11) தெரிவித்துள்ளது.

ரயில்

நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களை ரயில் பாதைகள் மூலம் இணைக்க சிறப்பு ரயில்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு ரயில்வே மற்றும் தெற்கு மத்திய ரயில்வே முறையே அதிகபட்சமாக 69 மற்றும் 48 சிறப்பு ரயில்களையும், மேற்கு ரயில்வே மற்றும் தெற்கு ரயில்வே முறையே 40 மற்றும் 20 சிறப்பு ரயில்களையும் அறிவித்துள்ளது. இந்த முறையும் தெற்கு ரயில்வேக்கு குறைந்த அளவிலேயே சிறப்பு ரயில்கள் சேவை அறிவிக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web