கோடை மழையால் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு... குஜராத்தில் இருந்து இறக்குமதி!

இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிலில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகிறது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முடிவடைந்த உடன் உப்பள தொழிலாளர்கள் உப்பு உற்பத்திக்கான பணிகளை தொடங்கினர். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் புதிய உப்பு வரத்தொடங்கியது. அதே நேரத்தில் அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் முழுவீச்சில் உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. அதே நேரத்தில் தூத்துக்குடியில் போதுமான அளவு உப்பு இல்லாததால் விலையும் அதிகரித்து உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!