தென்மாவட்டங்களுக்கு கோடை சிறப்பு ரயில் அறிவிப்பு!

 
ரயில்


தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிவடைய உள்ள நிலையில், கோடைகாலத்தில் சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. நடப்பாண்டின் கோடைகாலத்தில், சொந்த ஊர் சென்று திரும்புவோர் வசதிக்காக, சிறப்பு ரயில் அறிவிக்கப்படுகிறது.

ரயில்

தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதன்விவரம் வருமாறு: திருச்சியில் இருந்து ஏப்ரல் 4ம் தேதி முதல் ஏப்ரல் 27ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகாலை 5.35 மணிக்கு சிறப்பு ரயில் (06190) புறப்பட்டு, அதேநாள் நண்பகல் 12.30 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

அதே போன்று மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 4ம் தேதி முதல் ஏப்ரல் 27ம் தேதி வரை (வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்) பிற்பகல் 3.45 மணிக்கு சிறப்பு ரயில் (06191) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.40 மணிக்கு திருச்சிராப்பள்ளியை அடையும்.

ரயில்

இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக திருச்சியை அடையும். சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web