விட்டாச்சு லீவு.... நாளை முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை!

 
விடுமுறை

இந்தியாவின் பல பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது. வடமாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் சில இடங்களில் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா முழுவதும் பருவமழை தவறாமல் நன்றாக பெய்தது. இருந்த போதும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து  வருகிறது.  

விடுமுறை

இந்நிலையில்  இந்தியாவின் 90 சதவீத பகுதிகள் வெப்பம் பரவும் எனவும், குறிப்பாக தலைநகர் டெல்லி பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்ப அலை பரவலை முன்னிட்டு, அதனை எதிர்கொள்ள, பணி நேரங்களை மாற்றியமைத்து கொள்ளும்படி மாநில அரசுகளிடம், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  நாளுக்கு நாள்  வெப்ப அலை அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஒடிசா அரசு முன்கூட்டியே கோடை விடுமுறையை அறிவித்து விட்டது.

விடுமுறை

அதன்படி  ஒடிசாவில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கூடங்களுக்கும் நாளை முதல் கோடை விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.அத்துடன் வெயில் அதிகமாக இருக்கும் காலை 11 மணி முதல் 3 மணி வரை அவசியப் பணிகள் தவிர வீட்டை வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web