ஏப்ரல் 2 வது வாரத்தில் கோடை விடுமுறை?!

 
விடுமுறை

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கு இம்மாத இறுதியில் முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு மே மாதத்தில் கோடை விடுமுறை அளிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் நடப்பாண்டில் இப்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ட்வீட்

இது குறித்து அவருடைய ட்விட்டர்  பதிவில்  தமிழகத்தில் பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்டது. 10,11,12ம் வகுப்புக்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெயிலில் பள்ளிக்கு செல்ல முடியாமல் குழந்தைகள் வாடி வதங்கி வருகின்றனர்.  ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு தான்  அவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். ஏப்ரல் கடைசி வாரத்தில் தான் அவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்படும் 

அன்புமணி ராமதாஸ்
11, 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் அடுத்த சில நாட்களில் நிறைவடைந்து விடும். தொடக்கநிலை வகுப்புகளுக்கு தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏன்?  ஏப்ரல் இறுதி வரை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்  என்று எந்த கட்டாயமும் இல்லை. குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் . ஏப்ரல் 2ம் வாரத்தில் இருந்து  கோடை விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web