அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்!

 
வெயில்

தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பிப்ரவரி 28ஆம் தேதி ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். புதுவை மற்றும் காரைக்காலிலும் இதே நிலை தொடரும்.

வெயில் மாஸ்க் மாணவிகள் இளம்பெண்கள்

மார்ச் 1 மற்றும் 2ம் தேதிகளில் மலை மாவட்டங்களில் லேசான மழை சாத்தியம் உள்ளது. கடலோர பகுதிகளில் அதிகாலை பனிமூட்டம் காணப்படலாம். மார்ச் 3 முதல் 6 வரை பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை மாற்றம் காரணமாக சூழல் மாறுபடும் என கூறப்பட்டுள்ளது.

வெயில் வெப்பம் மாணவிகள் கல்லூரி

பிப்ரவரி 28 முதல் மார்ச் 1 வரை வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும். ஆனால் மார்ச் 2 முதல் 4 வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 அளவு உயரக்கூடும். இதனால் வெயில் தாக்கம் அதிகரிக்கும். மதிய நேரங்களில் வெளியில் செல்லும் மக்கள் கவனம் தேவை. குடிநீர் மற்றும் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!