21 வது ஆண்டு சுனாமி நினைவு தினம்.... ஆழிப்பேரலையின் தீராத சோகம்...

 
sunami
 

கடல் அலைகள் என்றாலே வெள்ளை நுரை ததும்ப, இதமான இரைச்சலுடன் கரையைத் தொட்டு பின்வாங்கும் அழகான காட்சி நினைவுக்கு வரும். கால் நனைப்பவர்களை வாஞ்சையுடன் வருடிச் செல்லும் அந்த அலைகள், மனித மனங்களுக்கு நிம்மதியைத் தருவதாகவே இருந்தன. ஆனால் “அழகு என்றும் ஆபத்து” என்பதைக் கடல் உணர்த்திய ஆண்டு 2004.

சுனாமி

இதற்கு 21 ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 26 அதிகாலை இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், 30 மீட்டர் உயரம் கொண்ட சுனாமியை உருவாக்கியது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளின் கடலோர பகுதிகளை அது கொடூரமாக தாக்கியது. என்ன நடக்கிறது என்றே புரியாமல் மக்கள் ஓடினார்கள். இரக்கம் இல்லாத அந்த ஆழிப்பேரலை, வயது வித்தியாசம் பார்க்காமல் உயிர்களை வாரிச் சுருட்டியது. 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் உயிரிழந்தனர். 43 ஆயிரத்து 786 பேர் காணாமல் போனார்கள்.

சுனாமி

தமிழகத்தில் சென்னை முதல் குமரி வரை வங்கக் கடலோரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகப்பட்டினம், கடலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பேரழிவு தடம் பதித்தது. குடும்பங்களை இழந்த வேதனை, வாழ்க்கையை மாற்றிய துயரம் இன்னும் மறையவில்லை. 21 ஆண்டுகள் கடந்தும் அந்த மரண ஓலம் காற்றோடு கலந்தே கேட்கிறது. இன்று சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர கிராமங்களில், கடலில் பால் ஊற்றி, பூக்கள் தூவி, உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!