ஏஐ துறையில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்... சுந்தர் பிச்சை நம்பிக்கை!
செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது என்று Sundar Pichai தெரிவித்துள்ளார். தில்லியில் நடைபெற்ற ‘இந்தியாவின் உருமாற்றத் திறன் மற்றும் செயற்கை நுண்ணறிவு தாக்கம்’ உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்தியாவின் ஏஐ வளர்ச்சி அசாதாரணமானது என்றும், புதிய கண்டுபிடிப்புகளுக்கான மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் கூறினார்.

பாக்ஸ் சிலிகா – இந்தியா இணைவு ஒப்பந்தம், மத்திய அமைச்சர் Ashwini Vaishnaw மற்றும் அமெரிக்க துணை அமைச்சர் Jacob Helberg முன்னிலையில் கையெழுத்தானது. இந்தியா–அமெரிக்கா கூட்டாண்மை ஏஐ வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே பாலமாக Google செயல்படுவது பெருமை அளிப்பதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் உருவாகும் புதுமைகள் உலகளாவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றார். Google Pay போன்ற தயாரிப்புகள் இதற்குச் சிறந்த உதாரணம் என்றும் கூறினார். தயாரிப்பு, உள்கட்டமைப்பு என அனைத்து துறைகளிலும் இந்தியாவுக்கு முழு ஆதரவு வழங்குவோம் என்றும், ஏஐ துறையில் இந்தியாவின் எதிர்காலம் மிகவும் பிரகாசமானது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
