இந்திய அணியில் சூப்பர் 8ல் மாற்றம்... ரிங்குவா? சுந்தரா? ரசிகர்களிடையே நீடிக்கும் குழப்பம்!
2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனைச் சுற்றி பெரிய விவாதம் கிளம்பியுள்ளது. ரிங்கு சிங் இடத்தை வாஷிங்டன் சுந்தர் பிடிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குழு சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் ரிங்கு விளையாடினார். ஆனால் எதிர்பார்த்த அதிரடி காணவில்லை. நான்கு போட்டிகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 88.89. ஃபினிஷராக இருந்தும் தாக்கம் குறைவு.

ஆனால் ஃபீல்டிங்கில் ரிங்கு சிறப்பாக இருந்தார். முக்கிய கேட்ச்கள் பிடித்தார். அவுட்ஃபீல்டில் ரன்கள் காப்பாற்றினார். இதனால் அணிக்கு உதவியாக இருந்தார். மறுபுறம், சைடு ஸ்ட்ரெயின் காயத்திலிருந்து திரும்பிய சுந்தர் நெதர்லாந்துக்கு எதிராக மட்டும் விளையாடினார். 4 ஓவரில் 36 ரன்கள் விட்டார். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இருந்தாலும் அவரது ஆஃப்-ஸ்பின் சூப்பர் 8 சுற்றில் உதவலாம் என்ற கருத்து நிலவுகிறது.
சூப்பர் 8-இல் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே போன்ற அணிகளை எதிர்கொள்ளும் நிலையில் பவுலிங்-பேலன்ஸ் முக்கியம். சுந்தரை சேர்த்தால் சமநிலை கிடைக்கலாம். ஆனால் ஃபினிஷராக அவரை நம்புவது சவாலாக இருக்கும். அணி நிர்வாகம் எடுக்கும் இந்த முடிவு தொடரின் போக்கையே மாற்றக்கூடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
