விண்வெளியில் இருந்து வாக்களித்த சுனிதா வில்லியம்ஸ்!
உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று மாலை தொடங்கப்பட்ட நிலையில் இன்று காலையில் நிறைவடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது வரை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிக எலக்ட்ரால் வாக்குகளைப் பெற்று குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் முன்னிலைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்கத் தேர்தலில் வாக்களிக்க விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் டான் பெட்டிட் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, வாக்களித்தனர். அத்துடன் அதற்கான புகைப்படத்தைப் பகிர்ந்து”அமெரிக்கராக இருப்பதில் பெருமிதம்” என நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம், விண்வெளியில் அமர்ந்து, நின்றோ அல்லது மிதந்தோ எந்த இடத்திலிருந்தாலும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து உணர்த்தியுள்ளனர்.
விண்வெளியில் இருந்து அவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி தரையில் உள்ள ஆண்டெனாக்களுடன் தொடர்பு கொள்ளும் செயற்கைக்கோள்களின் அமைப்பான நாசாவின் நியர் ஸ்பேஸ் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி அவர்கள் அளிக்கும் வாக்குகள் மீண்டும் பூமிக்கு அனுப்பப்படுகின்றன. விண்வெளி வீரர்களுக்கு விண்வெளியிலிருந்து வாக்களிக்கும் வசதி 1997 ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. டெக்சாஸ் சட்டமன்றம் இயற்றிய சட்டத்திற்குப் பிறகு இந்த வசதி கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!