சூப்பர்!! ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு!! அரசாணை வெளியீடு!!

 
ஆசிரியர்கள்

தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளியில் பணிபுரியும், தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் 157 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதன்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ8000ம்,  பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ9000ம்,  முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதத் தொகுப்பூதியமாக ரூ.10,000ம் மாதச் சம்பளமாக வழங்கப்படும். 

ஆசிரியர்கள்


மேலும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 830 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தெரிவு செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7500ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000ம், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12,000ம் மாதத் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நிரப்பிக் கொள்ளவும் ஆதிதிராவிடர் நல இயக்குநருக்கு அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதே போல்  தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் ரூ.12,000ம், பட்டதாரி ஆசிரியருக்கு மதிப்பூதியம் ரூ.15000ம், முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.18,000ம்  மதிப்பூதியம் வழங்கப்படும். பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும்  221 ஆசிரியர்களுக்கும்  புதிதாக நிரப்பப்பட உள்ள 194 தற்காலிக ஆசிரியர்களுக்கும் மதிப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள்

இதன் படி மொத்தமாக உள்ள 415 தற்காலிக ஆசிரியர்களில் இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12,000ம், பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000ம், முதுகலைப்பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.18,000ம் தொகுப்பூதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்த்தி வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நல இயக்குநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் நிரப்பப்பட்ட ஒப்பந்த ஆசிரியர்களுக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் ரூ.12000 மற்றும் ஒரு பட்டதாரி ஆசிரியருக்கு மதிப்பூதியம் ரூ.15,000 மற்றும் ஒரு முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.18,000 என திருத்திய மதிப்பூதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் இந்த அறிவிப்பு தற்காலிக ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web