இனி ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில், மெட்ரோவில் பயணம் செய்யலாம்! வெளியானது சூப்பர் அறிவிப்பு!

 
பேருந்து , ரயில், மெட்ரோ

வெளிநாடுகளில் பொது போக்குவரத்தை பொறுத்தவரை ரயில், பேருந்து அனைத்திற்கும் ஒரே கார்டு தான். இதன் மூலம் எந்த பொது போக்குவரத்திலும் பயணம் செய்ய முடியும். அதே போல் சென்னையிலும் பயணத்தை எளிதாக்கும் வகையிலும், பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் பல்வேறு முயற்சிகள், பரிசீலணைகள், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை முழுவதையும் மெட்ரோ ரயில் மூலம் இணைக்க அனைத்து பகுதிகளிலும்  மெட்ரோ ரயில்கள் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பேருந்து , ரயில், மெட்ரோ

சென்னையைப் பொறுத்தவரை பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் மூன்றிலும் பயணிப்பதற்கான ஒரே டிக்கெட் முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.    அதன்படி தற்போது இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2024 தொடக்கத்தில் இந்த  நடைமுறை பயன்பாட்டு வரும் என   சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

பேருந்து , ரயில், மெட்ரோ


ஒரே பயணச்சீட்டு முறைக்கு என தனியாக செயலி உருவாக்கப்படும். இந்த செயலியில்  புறப்படும் இடம், சேரும் இடம் இவை பதிவு செய்யப்படும். அதன் பிறகு  பயணிக்க உள்ள போக்குவரத்து முறைகளை பதிவு செய்ய வேண்டும். 3 வகையான பயணங்களுக்கு ஒரே பயண சீட்டு அமலாவது இந்தியாலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. இந்த திட்டத்தை  முறையாக செயல்படுத்தி பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான டெண்டரை தனியார் நிறுவனத்திடம் விட பரிசீலனையும் உள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web