சூப்பர்... மெட்ரோ ரயில் நிலையத்தில் நிரந்தர புத்தக பூங்கா!

சென்னையில் முக்கிய பொதுப்போக்குவரத்து சேவைகளில் குறிப்பிடத்தக்கது மெட்ரோ ரயில் சேவை. மெட்ரோவில் பயணம் செய்பவர்களுக்காக மெட்ரோ நிர்வாகம் அடுத்தடுத்து அதிரடி அப்டேட்களை செய்து வருகிறது. அந்த வகையில் மெட்ரோ பயணிகளுக்காக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பிரியர்களுக்காக நிரந்தர புத்தக பூங்கா திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள், தள்ளுபடி விலையில் புத்தகங்கள், சிற்றுண்டிச்சாலை எனப் பல வசதிகள் உள்ளன.
எலக்கட்ரானிக் யுகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இளைப்பாறும் பூஞ்சோலையாக புத்தக பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மனிதர்கள் இயந்திரங்களில் வேகத்திற்கு ஏற்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே ஒரு நாள் விடுமுறை கிடைத்தாலே சந்தோஷத்தில் துள்ளி குதிக்கின்றனர். இந்நிலையில் வேலை டென்ஷனை போக்குவதற்கு சுற்றுலா ஒரு பக்கம் உதவியாக இருந்தால் மறுபக்கம் நல்ல நல்ல புத்தகங்கள் மனிதனை உத்வேகப்படுத்துகின்றன.
மனிதனின் சிறந்த நண்பனாக விளங்குவது புத்தகமாகும், எனவே புத்தகங்கள் படிப்பது தற்போது உள்ள காலகட்டத்தில் குறைந்து வரும் நிலையில், இதனை அதிகப்படுத்தும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன் மூலம் மக்களிடம் புத்தக வாசிப்பை அதிகப்படுத்த ஒரு வாய்ப்பாக உருவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்தாக இன்று மெட்ரோ ரயில் உள்ளது. எனவே சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரு நிரந்தர புத்தக பூங்கா திறக்கப்பட இருப்பது தான் தற்போது புத்தக பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக உள்ளது.
அந்த வகையில் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதையில் ஒரு பகுதியில் புத்தக பூங்கா அமையவுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்கள் புத்தகங்களை காட்சிப்படுத்தவுள்ளனர். சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் 5,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக பூங்காவில் 70 புத்தக அலமாரிகள் அமைக்கப்படவுள்ளன. வசதியான இருக்கைகளுடன் கூடிய மேசைகள் மற்றும் ஒரு சிற்றுண்டிச்சாலை ஆகியவையும் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தக பூங்காவில் புத்தகங்களுக்கு 10% தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பென்குயின் மற்றும் ஹார்பர்காலின்ஸ் போன்ற பிரபலமான பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை இங்கு காட்சிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புத்தகங்களை பிரபலப்படுத்துவதும், படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகத்தான் இந்த திட்டம் தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!