சூப்பர்.. சென்னை - கோவை பயண நேரம் குறைவு.. சோதனை ஓட்டம் வெற்றி!

 
வந்தே பாரத்

ஈரோஇந்தியாவில் ரயில்வே நிர்வாகம் தற்போது முக்கியமான நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்களை இயக்கி வருகிறது. இதுவரை பல நகரங்களை இணைக்கும் வகையில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தென்னிந்தியாவிற்குச் சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மைசூருவிற்குக் கடந்த நவம்பர் மாதம் வந்தேபாரத் ரயில் சேவை துவங்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்திற்கான இரண்டாவது வந்தேபாரத் ரயில் சேவை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ஆவது வந்தே பாரத் ரயில் சென்னை - கோயம்புத்தூர் இடையே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான, ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த ரயில் கோவையிலிருந்து கிளம்பி 6 மணி நேரத்தில் சென்னையை வந்தடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

வந்தே பாரத்

இந்நிலையில், சென்னை - கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று (மார்ச் 30) தொடங்கியது. சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. கோயம்புத்தூரை முற்பகல் 11.40 மணிக்கு சென்று அடைந்தது. அதேபோல் அங்கிருந்து, நண்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

வந்தே பாரத்

இந்த ரயில் வாரத்தில் புதன் கிழமை தவிர மற்ற நாட்களில் எல்லாம் இயக்கப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது. இருமார்க்கமாகவும் இந்த ரயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த சோதனை ஓட்டத்தில், தெற்கு ரயில்வே உயரதிகாரிகள் கலந்து கொண்டு உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 
 

From around the web