சூப்பர்... குட் பேட் அக்லி திரைப்படம்... ’தல’ பெண் ரசிகைகளுக்கு சிறப்புக் காட்சி!

 
குட் பேட் அக்லி

 இன்று தமிழ் திரையுலகில் முண்ணனி கதாநாயகர்களில் ஒருவரான அஜீத்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் அஜித் குமார் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம், உலகம் முழுவதும் இன்று காலை 9 மணிக்கு வெளியானது.

குட் பேட் அக்லி

இந்த திரைப்படத்தில் அஜித்துடன் நடிகர்கள் த்ரிஷா, சுனில், சிம்ரன், அர்ஜுன் தாஸ், யோகி பாபு என நட்சத்திர பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருப்பூரில் உள்ள பிரபல மல்டி பிளக்ஸ் திரையரங்கில் பெண்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்பட்டுள்ளது.

குட் பேட் அக்லி

இதுகுறித்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக திரையரங்கத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார். மேலும், திரைப்படம் முடிந்தவுடன் சிறப்புக் காட்சியைக் கண்ட அனைத்து அஜித் ரசிகைகளுக்கும் திரையரங்கு சார்பில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்த திரையரங்கத்தின் நிர்வாகத்துக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web