சம்மரில் ஷாக்கடிக்கும் மின்கட்டணத்திலிருந்து தப்பிக்க சூப்பர் ஐடியாஸ்!

 
மின்கட்டணம்

தமிழகத்தில் இப்போதே வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது ஒரு மின்விசிறி மறுபக்கம் ஏசி, குளிர்சாதனபெட்டிகளும் 24 மணி நேரமும் ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கும். இதனால் கோடை வெயிலிலிருந்து தப்பித்து விடலாம். மின்கட்டணத்தை பார்த்தால் ஷாக்கடித்து விழுந்துவிடுவோம்.  எனவே, மின்சாதனங்களை கவனமாக பயன்படுத்தினால், மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் தவிர்க்கலாம் என்கின்றனர் அனுபவசாலிகள்.  
ஏசி உபயோகப்படுத்துபவர்கள்  எப்போதும் 24 - 26 டிகிரி செல்சியசிலேயே பயன்படுத்துவது நல்லது.  ஏசி இருக்கும் அறையில் அலமாரிகள், கப்போர்டுகளை மூடி வைப்பது நல்லது. திறந்திருந்தால்  அதிக மின்சார செலவு ஏற்படலாம்.

மின்
அதே போல் ஏசி இருக்கும் அறையில் ஜன்னல், கதவுகளை சரியாக மூடி வைக்க வேண்டியது மிக மிக அவசியம். அறையிலிருந்து வெளியே காற்று வெளியேறுவதற்கான வாய்ப்புகள் இருந்தால் அதனை அடைத்துவைப்பது நல்லது.
புதிதாக ஏசி வாங்குபவர்கள் 5 நட்சத்திரக் குறியீடு இருக்கும் பிராண்ட்டை செலக்ட் செய்யுங்கள். அந்த வகையான பொருட்கள்  குறைவாகவே மின்சாரத்தைப் பயன்படுத்தும்.
புதிதாக ஏசி வாங்குவோர், இன்வெர்ட்டர் கொண்ட ஏசிகளை வாங்குவது நல்லது. அது தேவைக்கேற்ப கம்ப்ரசரின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவதாக எலக்ட்ரீசியன்கள் தெரிவிக்கின்றனர்.  
மின் விசிறி பற்றி சொல்லவே வேண்டாம். அறையில் இருக்கும்போது மறக்காமல் சுவிட்ச் ஆன் செய்வதைப்போல, அறையை விட்டு வெளியே போகும்போது மறக்காமல் சுவிட்ச் ஆஃப் செய்து விடுங்கள். மின் விசிறிகளை அவ்வப்போது துடைத்து சுத்தமாகப் பராமரிப்பது நல்ல காற்றோட்டத்தைக் கொடுக்கும்.எந்த மின்னணு சாதனங்களையும் இயக்கிய பிறகு மறக்காமல் சுவிட்ச் ஆஃப் செய்து விடுங்கள்.
அதே போல் ஃப்ரிட்ஜை  சுத்தமாக வைத்திருப்பதும், அடிக்கடி திறக்காமல், தேவைப்படும் பொருள்களை ஒரே நேரத்தில் எடுத்துவிட்டு  ஒரே நேரத்தில் வைப்பதும், குளிர்பதனப் பெட்டி முழுக்க பொருள்கள் அடைத்து வைக்காமல் இருப்பதும் மிகமிக நல்லது.  வாஷிங் மெஷினில் கொஞ்சம் துணி இருக்கிறது என்று போட்டுவிடாமல், அதன் கொள்ளளவு நிரம்பும் வகையில் துணியைப் போடுவதால், மின்சாரத்தை சேமிக்கலாம்.

மின்
டிவியை தற்போது வைஃபையுடன் இணைத்துவிட்டால், சிலர் படம் பார்ப்பது ஃபேஷனாகி வருகிறது. அப்போது தொலைபேசி அழைப்பு வந்தால், டிவியை ஸ்டாப் செய்து பேசிக் கொண்டிருப்போம். பிறகு வேறு வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவோம். அவ்வாறு சென்றாலும் டிவிதான் ஸ்டாப் ஆகியிருக்குமே தவிர மின்சாரம் அல்ல என்பதை மனதில் வைத்துகொள்ள வேண்டும். 
அதே போல் ஒவ்வொரு பொருள்களையும் இயக்கிப் பார்த்து எப்போது மின் மீட்டர் அதிகம் ஓடுகிறது என்பதையும் கவனித்து அந்தப் பொருளில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வது உத்தமம். மின் கட்டணம் அதிகமாக வருபவர்கள் சோலார் மின் விளக்குகளை பயன்படுத்தி மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். இதனால் மின்கட்டணம் கணிசமாக குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

 

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web