சூப்பர் ஸ்டார் பட்டம் “waste of time"... தங்கலான் நாயகி சர்ச்சை பேச்சு...!

 
ரஜினி

தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அடுத்த  சூப்பர்ஸ்டார் விஜய் தான் என விஜய் ரசிகர்கள் பேசத்தொடங்கியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.  ஜெயிலர் பட ஆடியோ லாஞ்ச்சில் கலாநிதி மாறன்” 72 வயதில் ரஜினி மாதிரி நடிச்சா நீங்களும் சூப்பர்ஸ்டார் ஆகலாம்” என பதிலடி கொடுத்தது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நயன்


இது குறித்து இளையதளபதி விஜய்   லியோ சக்சஸ் மீட்டில் ”  சூப்பர்ஸ்டார்னா அது ஒருத்தர் தான்.  தான் எப்போதும்  மக்களுக்கான தளபதியாகவே இருக்க விரும்புவதாக கூறினார்”  அன்னபூரணி புரோமோ நிகழ்ச்சியில் நடிகை நயன் தாரா தனக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என கூறினார். இதுவும் பெரும் பேசுபொருளானது.  தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள மலையாள நடிகை பார்வதி, சூப்பர்ஸ்டார் பட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் இது குறித்து அவர்  பேசிய வீடியோ ஒன்று  வைரலாகி வருகின்றது.

விஜய்


அந்த வீடியோவில்  “சூப்பர் ஸ்டார் பட்டத்த போட்டுக்கிறதுல என்ன பெருமை இருக்கு. என்னை பொறுத்தவரை அது waste of time. சூப்பர் ஆக்டர் பட்டம் கிடைச்சா பெருமையா ஏத்துக்கலாம். சிலர் ஏன் தன்னை சூப்பர் ஸ்டார்னு பெருமையா சொல்லிக்கிறாங்கன்னு புரியல ” எனக் கூறியுள்ளார்.   நடிகை பார்வதியிடம் மலையாளத்தில் சூப்பர் ஆக்டர் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பகத் பாசில், ரீமா பெயர்களை குறிப்பிட்டார்.  நடிகை பார்வதி ரஜினிகாந்தை தான் இப்படி மறைமுகமாக சாடி உள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து  வருகின்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web