சூப்பர்... 6 லட்சம் மதிப்பில் தவெகவின் விலையில்லா வீடு!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தவெக சார்பில் பொதுமக்களுக்கு விலையில்லா வீடுகள் கட்டித்தரப்படுகின்றன. அந்த வகையில் சென்னை வில்லிவாக்கம் மேற்கு பகுதி சார்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விலையில்லா வீட்டினை அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் திறந்து வைத்தார்.
அத்துடன் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வில்லிவாக்கத்தை சேர்ந்த கணபதி பிரேமா என்கிற தம்பதியினருக்கு ரூ 6 லட்சம் மதிப்பில் இலவசமாக கிட்சென் வசதியுடன் சிமெண்ட் சீட்டு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
விலையில்லா வீட்டை கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் திறந்து வைத்து பூஜை செய்து அவர்களிடம் சாவியை ஒப்படைத்தார். பின்பு அப்பகுதியை சேர்ந்த 100 பொதுமக்களுக்கு காய்கறிகள் மளிகை பொருட்கள் உட்பட பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!