சூப்பர்...இனி வங்கிகளில் மாணவர்களுக்கு பிணையமற்ற கல்விக்கடன்!

இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு கல்விக்கடன் பிரதான் மந்திரி வித்யாலட்சுமி திட்டத்தில் வங்கிகளின் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது இந்த திட்டத்தை அரசு வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக அறிமுகப்படுத்தி உள்ளது. உயர் கல்வியை தொடர நிதி உதவி கோரும் மாணவர்களுக்காக மத்திய அரசின் ஒரு முயற்சி தான் இந்த திட்டம்.
இளைஞர்கள் தரமான உயர் கல்வியை பெறுவது உறுதி செய்வது தான் இதன் நோக்கம். இதற்கு டிஜிட்டல் முறையில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து வித்யாலட்சுமி தளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் கல்வி கடன் எந்த பாதுகாப்பும் இல்லாமல், எந்த உத்தரவாதமும் இல்லாமல் வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் முற்றிலும் டிஜிட்டல் செயல்முறை மூலமாக அணுகக் கூடியதாக மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குடும்ப வருமானம் மிக குறைவாக உள்ள மாணவர்களுக்கு கல்வி கடனை மிக மலிவு விலையில் வழங்குவதற்கு அவர்கள் குறைந்த அல்லது பகுதி வட்டி விகிதத்தில் இந்த கடனை பெறலாம். வித்யா லட்சுமி யோஜனாவை தவிர இந்தியாவில் உள்ள அனைத்து படிப்புகளுக்கும் 7.5 லட்சம் வரை பிணையமற்ற கல்வி கடன்களை வழங்குவதாக பேங்க் ஆப் பரோடா தெரிவித்துள்ளது. 384 நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 40 லட்சம் வரை பிணையமற்ற கல்வி கடன்களையும் வழங்கி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!