`சூப்பர் ஸ்டார்’ பட்டம் வேஸ்ட்... ரஜினியை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை?!

 
ரஜினி 171

'சூப்பர் ஸ்டார்’ பட்டம் வேஸ்ட் என பிரபல மலையாள நடிகை பார்வதி, நடிகர் ரஜினிகாந்த்தை மறைமுகமாக வெளுத்து வாங்கியுள்ளார். அவரது இந்த பேச்சு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

விஜய் , ரஜினி

சினிமாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்ந்து பிரச்னையைக் கிளப்பி வருகிறது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரஜினிகாந்தை ‘சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை சமீபத்தில் வெடித்தது. இந்த நிலையில், விஜய்தான் அது என ரசிகர்கள் இணையத்தில் பேச்சை ஆரம்பிக்க, ‘ஜெயிலர்’ பட இசைவெளியீட்டு விழாவில் ‘காக்கா-கழுகு’ என கதை சொல்லி பஞ்சாயத்தை ஆரம்பித்தார் ரஜினி. ‘ஆசைப்பட்டா என்ன தப்பு? ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான்’ என இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்.

பார்வதி

இதற்கடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாராவும் தன்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்க வேண்டாம் எனவும் அப்படி சொன்னால் தன்னை சிலர் திட்டுகிறார்கள் எனவும் கூறினார். இந்த நிலையில்தான் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் வேஸ்ட் என நடிகை பார்வதி சொல்லி இருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம், ’சூப்பர் ஸ்டார்’ நடிகர் யார் எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்,  சூப்பர் ஸ்டார் எனப் பட்டம் போட்டுக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது. அது வேஸ்ட் ஆஃப் டைம். சிலர் ஏன் தங்களை சூப்பர் ஸ்டார் என அழைத்துக் கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை. சூப்பர் ஆக்டர் என்பதில்தான் பெருமை. மலையாளத்தில் நடிகர்கள் பகத், ரீமா இவர்கள் எல்லாம் சூப்பர் ஆக்டர்கள்” எனக் கூறியுள்ளார் பார்வதி. பார்வதியின் இந்த பதிலைப் பார்த்த ரசிகர்கள் அப்போது அவர் ரஜினியைதான் மறைமுகமாக சொல்கிறாரா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web