அட... திருமண வரவேற்பில் ஆச்சர்யம்... தமிழ் வாழ்க பதாகையுடன் இருமொழிக்கொள்கைக்கு ஆதரவு!

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றன. ஆங்காங்கே போராட்டங்கள் ஆர்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜகவினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பூவிருந்தவல்லி அடுத்த நசரத்பேட்டையில் தமிழ் செல்வன் - சிவரஞ்சனி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில், மணமக்கள் ஆத்திச்சூடி ,திருக்குறள் உட்பட தமிழ் புத்தகங்களை சிறுவர்களுக்கு பரிசாக வழங்கினர்
இதையடுத்து தமிழ் வாழ்க என்ற பதாகையை கையில் ஏந்தியபடி மும்மொழிக் கொள்கைக்கு எதிராக முழக்கமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்னர். இது திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பெரும் பேசுபொருளாகவும் அமைந்தது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!