அடக்கொடுமையே... பிரபல கல்லூரி மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை.. கல்லூரி முதல்வர் கைது!

 
ஜார்ஜ் ஆபிகாரம்

வேலியே பயிரை மேய்ந்த கதை தான் தமிழகத்தின் அனைத்து துறைகளிலுமே நடந்து வருகிறது. வெகு சொற்பமான ஓநாய்கள் அனைத்து துறைகளிலுமே சிதறி கிடப்பதால், ஆட்டு மந்தைகளைப் போல அடைப்பட்டு கிடக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதில்லை. லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்.. சட்டத்தை மீறுகிற போலீசார்.. மாணவ, மாணவிகளை சொந்த  பிள்ளைகளாகப் பார்க்காத ஆசிரியர்கள் எல்லாம் போன ஜென்மத்தில் கழுதைகளாக... ஓநாய்களாக பிறந்திருப்பார்களோ?

தமிழகத்தின் மிகப் பிரபலமான ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லூரி சென்னை நந்தனத்தில் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்கு, முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த கல்லூரியில் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

ஜார்ஜ் ஆபிகாரம்

இது தொடர்பாக அந்த மாணவி கல்லூரி முதல்வர் மீது சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவியின் புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கல்லூரி முதல்வர் ஆபிரகாமுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி அவர் ஒரு மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.

இதனிடையே, இதே விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் நடத்திய விசாரணையில், முதல்வர் ஆபிரகாம் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டது. மேலும்  உடற்பயிற்சி கூடத்தில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் பல சமயங்களில் அத்து மீறியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனால் கல்லூரி நிர்வாகம் சார்பில் கடந்த 9ம் தேதி சென்னை சைதாப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஜார்ஜ் ஆபிகாரம்

இந்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிகாரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web