தமிழக ஆளுநரின் செயல்பாடு தவறு... உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
ஆர்.என்.ரவி


தமிழகத்தின்  ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்கிறார்.  துணை வேந்தர் நியமனங்களில் சட்டத்தை மீறி செயல்படுகிறார், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால அவகாசம் நியமிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் தமிழக அரசு சார்பில்  உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.  

ஸ்டாலின் ரவி


இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்று வந்தது. அதில், மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்யும் ஆளுநரின் செயல் சட்டப்படி தவறானது என பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளனர்.  
மாநில அரசு பேரவையில் தாக்கல் செய்யும் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை.
ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது.

ரவி


அரசியல் சாசனம் 200-வது சட்டப்பிரிவின் கீழ் தான் மாநில ஆளுநர் செயல்பட வேண்டும்.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக இன்னும் ஒரு மாதத்தில் அவர் முடிவு செய்ய வேண்டும்.
மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை.
ஆளுநருக்கு என தனிப்பட்ட அதிகாரம் இல்லை.
சட்டப்பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு அது ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட பிறகு அதில் எந்த மாற்றமும் செய்யாமல் மீண்டும் நிறைவேற்றம் செய்யப்பட்ட 10 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்டத்திற்கு எதிரானது.
என உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web