‘குலா’ விவாகரத்து முறை குறித்து உச்சநீதிமன்றம் விசாரணை!
முஸ்லிம் பெண்கள் கணவரின் சம்மதம் இன்றி விவாகரத்து பெறும் ‘குலா’ முறையை குறித்து உச்சநீதிமன்றம் ஏப்ரல் 22ஆம் தேதி விசாரணை நடத்த உள்ளது. இந்த முறையில் விவாகரத்து பெற நீதிமன்ற அனுமதி அவசியமா, அதன்பிறகு ஜீவனாம்சம் கோர முடியுமா போன்ற முக்கிய சட்ட கேள்விகள் இந்த வழக்கில் எழுந்துள்ளன.
குலா முறையை அங்கீகரித்து கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர் ஷோயப் ஆலம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணையின் முடிவு முஸ்லிம் பெண்களின் விவாகரத்து உரிமைகள் குறித்து முக்கிய தீர்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
