சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா.வின் உயரிய விருது: "தமிழ்நாடு பெருமை கொள்கிறது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

 
சுப்ரியா சாஹு சாகு

தமிழ்நாட்டின் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளருமான சுப்ரியா சாகுவுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயரிய சுற்றுச்சூழல் விருதான 'சாம்பியன்ஸ் ஆப் எர்த்' (Champions of the Earth) விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பைக் குறித்துப் பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சுப்ரியா சாகுவின் பணிகளைப் பாராட்டிப் பேசியுள்ளார். "காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் அமைப்பின் 'சாம்பியன்ஸ் ஆப் எர்த்' விருதினை வென்றுள்ள சுப்ரியா சாகுவுக்கு எனது பாராட்டுகள்!" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் ஐடியா! மீண்டும் மஞ்சப்பை கலாச்சாரத்தை முன்னெடுக்கும் சுப்ரியா IAS!

அரசின் முயற்சிகள்: மேலும், ஈரநிலப் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரித்தல், அருகி வரும் அரிய உயிரினங்களைக் காத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட தமிழக அரசின் சீரிய முயற்சிகள் மென்மேலும் சிறக்கும் வகையில் சுப்ரியா சாகுவின் பணிகள் தொடர, இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என்றும் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலுக்காகச் சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடிய தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு இந்த 'சாம்பியன்ஸ் ஆப் எர்த்' விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!