”சூரியின் நடிப்பு பிரமிப்பு”!! வைரலாகும் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி ட்வீட்!!

 
ரஜினி விடுதலை

நகைச்சுவை நடிகராக களமிறங்கி இன்று கதாநாயகனாக உயர்ந்து விடுதலை படத்தின் மூலம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் சூரி. சமீபத்தில் வெளியான இவருடைய விடுதலை திரைப்படம் பெருவாரியான மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வெளியானால் படத்தை பார்த்துவிட்டு உடனே படக்குழுவிற்கு தமது பாராட்டுக்களை தெரிவித்து விடுவார்.


அந்த வகையில், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியான விடுதலை படத்தை பார்த்துவிட்டு அதிரடி டிவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். முதலில்   இயக்குனர் வெற்றிமாறன், நடிகர்  சூரி இருவரையும்  நேரில் அழைத்து படம் மிகவும் அருமையாக இருப்பதாக பாராட்டுக்களை தெரிவித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகின . தற்போது ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தை பாராட்டியுள்ளார். அதில் ” விடுதலை… இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்! சூரியின் நடிப்பு – பிரமிப்பு. இளையராஜா – இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் – தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.


ரஜினிகாந்த்தின் இந்த பாராட்டுக்கு நடிகர் சூரி நன்றி தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டர் பதிவும் வைரலாகி வருகிறது. அதில்  “இதுவரை கிடச்ச வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன். இறைவனுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web