ஆச்சர்யம்!! 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை!!

 
4 கால்கள் குழந்தை

பெண்களுக்கு பிரசவம் என்பது மறுபிறவி தான். கடந்த சில நாட்களுக்கு முன் வாலுடன் குழந்தை பிறந்தது. 3 கால்கள், 3 கைகள், சில நேரங்களில் 2 தலை ஒரு உடல் என விநோத குழந்தைகளும் பிறப்பதுண்டு. அந்த மாதிரியான பிரசவங்கள் தாய்க்கு இன்னும் சிக்கலான நிலையை உருவாக்கி விடுவதுண்டு. ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டம் ரத்தன்கரில் உள்ள கங்காராம் தனியார் மருத்துவமனையில்  மார்ச்5ம் தேதி 19 வயது கர்ப்பிணி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சோனோகிராபி செய்த போது கர்ப்பிணியின் வயிற்றில் விசித்திரமான குழந்தை இருப்பது தெரியவந்தது.

4 கால்கள்

அந்த குழந்தைக்கு 2 இதய துடிப்புகள் உணரப்பட்டன. அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மணிநேரத்தில் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு 2 இதயம், நான்கு கால்கள் இருந்தது. இதனைக் கண்ட மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். வழக்கமான குழந்தைகளை போல் அந்த குழந்தை அழுதது . ஆனால் 20 நிமிடங்களுக்கு பிறகு திடீரென இறந்துவிட்டது.  இந்த  குழந்தைக்கு ஒரு தலை, நான்கு கைகள், நான்கு கால்கள் மற்றும் 2 இதயங்கள், 2 முதுகெலும்புகள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

4 கால்கள் குழந்தை

அதில்  “இந்த அதிசய குழந்தையை  சுகப்பிரசவமாக செய்வதில் பெரும் சவால்கள் இருந்தன. ஆனால் சரியான நேரத்தில் சுகப்பிரசவம் செய்து கர்ப்பிணியின் உயிர் காப்பாற்றப்பட்டது. அதேசமயம், பிறந்த 20 நிமிடங்களில் குழந்தை இறந்துவிட்டது.அந்த தாய் தற்போது  ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் இருக்கிறார். இந்த வகையான  பிரசவம் கான்ஜுனோகல் அனோமலி என அழைக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web